×

ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் வெயிலுக்கு ஒதுங்க வேண்டும் நிழற்குடை: பொதுமக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம், ஏப். 19: ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் நிழற்குடை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்திற்கு திருப்பூர், கோயம்புத்தூர், தாராபுரம், பழநி, திண்டுக்கல், மதுரை, வத்தலக்குண்டு, தேனி மார்க்கமாக தினமும் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. ஒட்டன்சத்திரம் நகரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சுற்றுப்புற கிராமமக்கள் மற்றும் வெளியூர்களை சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ஒட்டன்சத்திரம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர். ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் பஸ்கள் கிழக்குப்புறமாக உள்ளே வந்து, மேற்குப்புறமாக வெளியே செல்கின்றன. இதில் மேற்குப்புறத்தில் நிழற்குடை இல்லாததால் கோயம்புத்தூர், திருப்பூர், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி ஆகிய ஊர்களின் பஸ்களுக்காக பயணிகள் திறந்தவெளியில் வெயிலில் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால் முதியோர்கள், பெண்கள், கர்ப்பிணிகள் வெயில் கொடுமை தாங்காமல் மயங்கி விழும் நிலை ஏற்படுகிறது. எனவே ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் மேற்குப்புறம் நிழற்குடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்டில் வெயிலுக்கு ஒதுங்க வேண்டும் நிழற்குடை: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Otansatram ,Otansandram ,station ,Otansatra Bus Station ,Otensrah ,
× RELATED பெங்களூருவில் இருந்து வரத்து...